Friday, February 27, 2009

வனம் புகுவோம்

கவிஞர், அரசியல் நிபுணர், கல்வியாளர், பெண்ணியவாதி எனப் பன்முகம் கொண்ட கலைஞர் கேப்ரியல் மிஸ்ட்ரல். ”லூசிலா டி மரியா டெல் பெர்பெச்சுவோ சொகோரோ கொடாய் அல்கயாகா” எனும் நீண்ட இயற்பெயர் கொண்ட இவர் கேப்ரியல் மிஸ்ட்ரல் எனும் புனைபெயரில் எழுதியவர். சிலி நாட்டின் பிரஜையான மிஸ்ட்ரல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கப் பெண்மணி. உலகப் புகழ் பெற்ற பாப்லோ நெருடாவும் சிலி நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை, நம்பிக்கை துரோகம், காதல், தாயின் அன்பு, துயரம், பயணம் ஆகியவை அவரது பாடுபொருள்களாயிருந்தன. கொடிது கொடிது இளமையில் வறுமையென அவ்வை பாடியதற்கேற்ப இவரது இளமைப் பிராயம் வறுமையின் கொடுமை மிக்கதாயிருந்தது. இவர் தனது பதினைந்தாவது வயதில் தொடங்கியது கவிதை. ”ரகசியக் கடிதம்” (Intimate Letter) எனும் இவரது கவிதை முதல் முதலில் தினசரியொன்றில் பிரசுரமானது. அப்போதிருந்தே பல்வேறு புனைப்பெயர்களில் தொடர்ந்து எழுதி வந்தார்.

பதினேழாம் வயதில் ஒரு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்த மிஸ்ட்ரல் ரொமிலியோ என்ற ரயில்வே தொழிலாளியை சந்தித்தார். ரொமிலியோ மூன்று வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டார். மரணத்தின் தாக்கம் மிஸ்ட்ரலின் கவிதைகளில் படிமங்களானது. ரொமிலியோவின் தற்கொலை கேப்ரியலை இதுவரையில் எந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞரும் எழுதியிருக்காத அளவிற்கு மரணம் – வாழ்வு ஆகியவற்றைக் குறித்து எழுதத் தூண்டியது.

மிஸ்ட்ரலுக்கு பல ஆண்களுடனும் பெண்களுடனும் இருந்த நட்புறவை அவரது எழுத்து பிரதிபலிக்கத் தொடங்கியது. ஆயினும் தனது மனவெழுச்சி மிகுந்த வாழ்வினை மிஸ்ட்ரல் ரகசியமாகவே வைத்திருந்தார்.

சாண்டியாகோவில் நடந்த தேசிய அளவிலான இலக்கியப் போட்டியில் முதற்பரிசு வென்றது மிஸ்ட்ரலின் வாழ்வில் மிகப் பெரிய திருப்பு முனையாக அனமந்தது. தேசிய அளவில் கவனிக்கத் தகுந்த புகழ் அடைந்த எழுத்தாளராக மாறிய மிஸ்ட்ரலுக்கு அப்பொழுது வயது 25. ஜீகாஸ் ப்ளோரேல் எனும் அந்த தேசிய விருதை எட்டிய பிறகு லூசிலா கொடாய் என்ற பெயரில் எழுதுவதை விடுத்து, கேப்ரியல் மிஸ்ட்ரல் என்ற புனைப் பெயரிலேயே தனது படைப்பைத் தொடர்ந்தார்.

தனது எழுத்துலகப் பயணத்தின் பெயரை தனக்கு மிகப்பிடித்த கேப்ரியேல் டி அனுன்ஸியோ மற்றும் பிரட்ரிக் மிஸ்ட்ரல் ஆகிய இரு எழுத்தாளர்களிடமிருந்து புனைந்து கொண்டார். மிஸ்ட்ரலின் உலகளாவிய புகழ் அவரை தன் சொந்த நாடான சிலியில் தொடர்ந்து செயல்படத் தடையாயிருந்தது. நாற்பதாம் வயதில் பிரான்ஸுக்கு குடிபுகுந்த பிறகு மிஸ்ட்ரல் தனது வாழ்நாள் முழுவதையும் அங்கேயே கழித்தார்.

பிற லத்தீன் அமெரிக்கக் கலைஞர்களைப் போலவே மிஸ்ட்ரலும் தனது இறப்பு வரை அந்நிய நாட்டுப் பிரதிநிதியாக பல நாடுகளில் பணியாற்றினார். மேட்ரிட்டில் பணியாற்றிய பொழுது அவருக்குத் தன் போலவே பிரதிநிதியாய்ப் பணியாற்றி வந்த நோபல் புகழ் பெற்ற கவிஞனான பாப்லோ நெருடாவைச் சந்தித்தார். நெருடாவுடனான நட்பு அவரையும் ஒரு முன்னணி இயக்கத்திற்கு ஆதரவாளராக்கியது. அத்துடன் மிஸ்ட்ரல் ஸ்பெயினின் பத்திரிக்கைகளிலும் தினசரிகளிலும் நூற்றுக்க்கணக்கான கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிக்குவித்தார். இதனால் மிஸ்ட்ரல் புகழ் பரவத்தொடங்க கொலம்பிய நாட்டுத் ஜனாதிபதியான எடுவர்டொ சாண்டோஸ், எலினார் ரூஸ்வெல்ட் மற்றும் அனைத்து சிலி நாட்டு ஜனாதிபதிகளுக்கும் மிகவும் நம்மிக்கைக்குரியவரானார்.

மிஸ்ட்ரலின் இரண்டாவது கவிதைப் பெருந்தொகுதியான தாலா (Tala) 1938ல் அவரது நெருங்கிய நீண்ட நாள் நண்பரான விக்டோரியா ஒகாம்போவினால் பியூனஸ் ஏரிஸில் வெளியிடப் பட்டது. இதன் மூலம் கிடைத்த பணம் முழுவதையும் ஸ்பெயினின் உள்நாட்டுப் போரில் அனாதையான குழந்தைகளுக்குச் செலவிட்டார்.


இதற்கிடையே மிஸ்ட்ரலின் அக்கா மகனான 17 வயது மிகுஈயல் இறந்து போனான். இரண்டாம் உலகப் போரினால் மிகவும் மனம் பாதிக்கப் பட்டிருந்த மிஸ்ட்ரலுக்கு இம்மரணம் பேரிடியாக இரங்கியது. இந்த துயரத்தின் அவரது இறப்பிற்கு முன்னால் அவர் எழுதிய கடைசித் தொகுதியின் அலைகளானது. லாகார் (Lagar) எனும் அத்தொகுதி சில பிரிவுகளாகத் தொகுத்து வெளியிடப்பட்டது. சிலி கவிதைகள் (Poema de Chile) என்ற தலைப்பில் இதன் கடைசித் தொகுப்பு மிஸ்ட்ரலின் மரணத்திற்கு பின்பாக அவரது நண்பரான டோரிஸ் டானா என்பவரால் வெளியிடப்பட்டது. இக்கவிதைத் தொகுதி மிகவும் அற்புதமான படைப்பாக இருந்தது.

1945ம் வருடம் மிஸ்ட்ரலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மிஸ்ட்ரல் இப்பரிசைப் பெற்ற முதல் லத்தீன் அமெரிக்கரும் நோபல் பரிசு பெரும் ஐந்தாவது பெண்மணியுமாய் இருந்தார். ஸ்வீடன் நாட்டரசரான கஸ்டாவிடமிருந்தும் விருது பெற்றார். பிறகு நெடுநாளாய் வழங்கப்படாதிருந்த சிலிநாட்டின் உயரிய தேசிய இலக்கிய விருதும் மிஸ்ட்ரலுக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியா நாட்டின் கல்லூரி இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

உடல் நலம் குன்றியதால் மிஸ்ட்ரல் பயணங்களைத் தவிர்த்தார். தனது வாழ்நாளின் கடைசிப் பகுதியை நியூயார்க் நகரில் கழித்தார் புற்று நோயால் கணையம் பாதிக்கப் பட்டு தனது 67ம் வயதில் இறந்தார் சிலி நாட்டு அரசு அவரது மறைவுக்கு மூன்று நாட்கள் விடுமுறையுடன் துக்கம் அனுஷ்டித்தது.
*

இயற்கையின் நுட்பங்கள் மிளிரும் மிஸ்ட்ரலின் கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த ஒன்றை இங்கே மொழிபெயர்த்திருக்கிறேன்.
*

இப்போது நாம் வனம் புகலாம்
மரங்கள் உன் முகங்கடந்து போக
நானங்கு நின்று உன்னை
அவற்றுக்கு அர்ப்பணிப்பேன்
ஆனாலும் அவற்றால் வளைந்து
உனைப் பெற இயலாது.
இரவு கவனித்தபடியிருக்கிறது
தனது உயிரினங்களின்
பருவ மாற்றத்தை
என்றும் மாறாப் பைன்மரங்களைத்
தவிர்த்து.
பழைய ரணங்களுடன் பிசின் துளிர்க்கின்றது
ஆசீர்வதிக்கப்பட்ட கோந்து மரங்களில்
சாஸ்வதமான பிற்பகலில்.
இயலுமெனில் இம்மரங்கள்
உனை வாரியணைத்துத் தூக்கிச்செல்லும்
ஒரு பள்ளத்தாக்கிலிருந்து இன்னொன்றுக்கு.
நீயும் ஒரு தந்தையிடமிருந்து மறு தந்தையிடம் ஓடும்
குழந்தையெனச் செல்வாய்
ஒரு கரத்திலிருந்து மறுகரத்திற்கு

மூலம் : கேப்ரியல் மிஸ்ட்ரல்
மொழிபெயர்ப்பு : தாரா கணேசன்

Wednesday, February 25, 2009

தீயில் பூ


எல்லாத் தூசையும் எரித்து

எழுகிறது ஒரு தீ


எல்லா வெயிலுக்கும்

மத்தியில் மலர்கிறது

ஒரு பூ

Divine Yearnings Shared We


Divine yearnings shared we, amidst anguished state of mind

Awakened beams of love, could a feeble shadow hide
Gleam of vision dissolves in poetic oceans timeless
As we journey through spaces illuminant.
Tears and laughter, Pains and rains Light and darkness
Death and births, and Life and lust float upon river of thoughts
Poetry fills my abyss transcending me to another realm
Where gates eternal love open with a warm welcome.
The infinite sky has dawned and this a wonderful morn
Like those feathery birds let this thought be
Wind-floated and reach your palm
I now hear the hymns of abode as I pen
My rain soaked words are cleansed afresh
The midnight thunders let me sleep not
Beauty of torrential morn blooms exotic thoughts
Let this dawn be my bliss
Glorious God of eternal light is on his steed of truth
Earthly plants bow him with joyous overwhelm
Mighty Gods and lofty nature tune my heart
With the rays of golden Sun my poetry is spun
Lush fields lie sated in heavenly downpour
Milky cranes dig the fields with their long beaks
Nature wraps me in its torrential robe, splendid
Watching me rain-clad Earth sighs in amazed silence
Tranquil now is the complex grieving heart
Yet, poignant thoughts fuel my mystic mind
Delighted sky showers as watery blossoms
Reposed eyes embrace nature and sparkles
Spirit cries, spirit rejoices seeking ultimate freedom
Poetry suddenly flows like heavenly streams
Glowing leaves drip chlorophyll drizzles
Distant thunders echo monsoon poetry
Thoughts are profound in boundless mind
Hazed misty garb of rain adorns the earth
Sluggish snails crawl leaving silver mucous trail
Spongy mushrooms upon earth have bloomed
Sky orchestrates the symphony of clouds
Fingers quiver as thoughts are unwound
Nadir of my soul stirs up from prolonged slumber
Graceful dreams sparkle gleam upon lids
Spirit floats through rapturous streams
Delinked links I search to string them with torrents
Power of thoughts outwit poetry
Length and breadth of vision is too vast
To compress within the frames of poetry
Marvel of rain transcends thoughts into marvelous aesthetics
Intellect lights ignorant mind with the torch of profundity
Mortal me turn immortal in wisdom’s paradise
Will you for a while hold the palm of my Divine psyche?
Brilliant coloured rainbows I envision since dawn
Abundant hues splash I upon canvas plain
Chaotic chromatic canvas is now my spirit
Be my easel to hold my crayon paintings
Pours, it pours, it downpours
The veil of rain is becoming opaque
Muse bound heart begins the tribal dance
As beauty sways around, pours the bliss
When all the shadows are luminance filled
I speak not the language of humans
I breathed easy lost in meditation
Inhaled fresh air cleanses my polluted lungs
Sweat of my toiled journey it eased with peace
Awakened feel seeps through state of trance
Prophet you are made of morals profound
Truth of truths is your spirit of esteem
Timeless time I walked upon vast shores
Following the footsteps I merged Divine
Hitherto mortals comprehend not the journey of births
Myth, they say, mock and stone me with crooked visions
Doubts of arrows pointedly poisoned pierce the soul
Yet unaware they are, soul is beyond death
Flight of birds end up in a perching
Yet feathers are meant for expanse flight
God, hold me close, for this day is strange
I cease my ceaseless thoughts, to be mundane again

Thara Ganesan
15।10।2008



பாப்லோ நெருடா
Translation : Thara Ganesan

இந்த அந்தியையும் தவற விட்டுவிட்டோம்
இந்த அந்தியையும் தவற விட்டுவிட்டோம்
நீல இரவு கவியும் இம்மாலையில் எவரும் பார்க்கவில்லை
பின்னியிருக்கும் நம் கரங்களை

தூரத்து மலை முகடுகளில் சூர்ய அஸ்தமனத்தின் கொண்டாட்டத்தை
என் ஜன்னல் வழியாகப் பார்க்கின்றேன்

சிலநேரம் ஒரு துண்டுச் சூரியன்
என் உள்ளங்கையில் இருக்கும் நாணயமாய் தகிக்கின்றது

ஆத்மாவைப் பற்றியிருக்கும் உனை நினைவுகூர்கிறேன்
நீயறிந்த என் வருந்தங்களோடு

எங்கிருந்தாய் அப்போது?
வேறு எவரிருந்தார் அங்கே?எதைச் சொல்லியபடி?
நீ வெகுதூரத்திலிருக்கிறாயென வருந்தியிருக்கையில்
அத்தனை காதலுமேன் மொத்தமாய் வரவேண்டும்
சற்றும் எதிர்பாராமல் என்னிடத்து விதிவிலக்கின்றி

பகலின் புத்தகத்தை மூடும் அந்தி சாய்ந்து விழ,
ஒரு காயமுற்ற நாயென சுருள்கிறதென் காலருகே நீ
ல வண்ணக் கம்பளிச்சட்டை

எப்பொழுதும் நீ மாலை வழியே பின்வாங்குகிறாய்
சிலைகளையழிக்கும் அந்தியை நோக்கி। *
***
2. மேலான உயிர்த்தெழுதல் (சில்வியா பிளாத் )
- Translation : Thara Ganesan

என்னிடம் விவேகமில்லை, சொற்களில்லை, கண்ணீரில்லை
அளவற்ற எதிர்பார்ப்புகளிலும் அச்சங்களிலும்மரத்திருக்கின்றது
என்னுள் கல்லெனக் கிடக்கும் இதயம்
அக்கம் பக்கம் பார்த்தபடி தனித்து வசிக்கிறேன்
சோகம் மிகுந்து மங்கிய விழிகளை உயர்த்துகிறேன்
மலைத்தொடர்கள் எவற்றையும் நான் காணவில்லை
உதிரும் இலை போலிருக்கிறது வாழ்வு
ஓ இயேசுவே, அதை துரிதப்படுத்து


**


Tuesday, February 24, 2009

Alchemy of enlightenment



Alchemy of enlightenment।

- osho

முதன் முதலாக வியன்னா நகருக்கு மின்சாரம் அறிமுகமான புதிதில் சிக்மன் பிரோயேட் கிராமிய நண்பர் ஒருவர் அவரைக்காண வந்து இருந்தார் । பிரோயேட் இரவு அவரை ஒரு அறையில் தங்க வைத்தார் .மின்சாரம் புதிது .அவருக்கு அது பற்றி பயம் .ஆகவே அவர் அறையில் உள்ள மின் விளக்கை உடனடியாக அணைக்க விரும்பினார். படுக்கையில் ஏறி நின்று வாயால் ஊதி பார்த்தார் .விளக்கு அணையவில்லை .விளக்கை அணைப்பதற்கு பிரோயேட் எழுப்பி கேட்கலாம் .ஆனால் அவர் மிகவும் மட்டமாக கருதிவிடலாம் .ஆகவே மின்விளக்கு பளிச்சென்று எரிய பயந்துக்கொண்டே தூங்கினார் . காலையில் பிரோயேட் வந்ததும் “என்ன இரவு நல்ல உறக்கமா? ” என்று கேட்டார் .


“எல்லாம் சரிதான் ஆனால் எவ்வாறு இந்த விளக்கை அணைப்பது ?” என்று கேட்டார் .பிரோயேடிக்கு அப்போதுதான் புரிந்தது இவருக்கு மின்சாரபயன்பாடு பற்றி ஏதும் தெரியாது என்பது .”இங்கே வா சுவரில் உள்ளது சுவிட்ச் ,இதை இப்படி அழுத்தினால் போதும் விளக்கு அணைந்துவிடும் .என்றார் . “பட்டனை தட்டினால் போதுமா ,இப்போது புரியுது கரண்ட் என்றால் என்னவென்று ” என்றாராம் .மின்சாரம் என்பதைப்பற்றி உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் ? பட்டனை தட்டுவது தன் தெரியும் .அன்பை ,காதலை பற்றி என்ன தெரியும் ?உள்நோக்கிசென்று அதன் உணர்வுத்தளத்தில் இவற்றை எல்லாம் சந்தித்து அதன் இயக்கப்போக்கை அறிந்து கொண்டீர்களா ?யோசித்து பாருங்கள் .எதுவும் தெரியாது .உங்களுக்கு உங்களைப் பற்றி எதுவும் தெரியாது .உங்களின் மனதைப் பற்றி எதுவும் தெரியாது .வாழ்வின் உள்ளடக்கம் பற்றி எதுவும் தெரியாது .அனாதிகாலமாக இந்த இருப்புலகத்தில் தான் நீங்கள் மையம் கொண்டு உள்ளீர்கள் ..தொடர்ந்து பல ஜென்மங்களாக நீங்கள் வாழ்ந்தபோதும் உங்களை நீங்களே உணர்ந்து கொள்ளாத நிலையில் ,மிக சொற்ப காலத்தில் உங்கள் மனைவியாகட்டும் ,மக்களாகட்டும் அவர்களை எவ்வாறு உங்களால் புரிந்துக்கொள்ள முடியும் . மகிழ்ச்சி எங்கிருந்து வருகிறது ?கோபம் எங்கிருந்துவருகிறது ? அதன் உற்பத்தி களம் எங்கே ? எதுவும் தெரியாது .ஒரு முறை மகிழ்ச்சியாக இருக்கின்றவர் அடுத்த கணத்தில் சோகமாக மாறிவிடுகின்றார் .ஏன்?என்னதான் நடைபெறுகிறது ?அதன் ஆரம்ப புள்ளி எங்கே ?அதன் ஆதாரசுரிதி எங்கே ? உங்களுக்கு தெரியாது .
உங்களிடம் எழும் இது போன்ற உணர்வுகளின் இயக்கபோக்கை உணர்த்து கொள்ளாத நிலையில் நீங்கள் எவ்வாறு மற்றவர்களின் கோபதாபங்களை அறிந்துகொள்ள முடியும் ?உங்களின் மனதை உங்களின் இருப்புணர்வை சரியாக அறிந்துகொண்டுவிட்டால் மற்றவர்களின் மனதை இருப்புணர்வை நீங்கள் புரிந்துகொள்ள முடியும் .

முல்லா


முல்லா நஸ்ருதின் கப்பலில் வேலை கேட்டு விண்ணப்பித்து இருந்தார் ।அவர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டார் ।அவரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியவர் கேட்டார் “புயல் வருமானால் என்ன செய்வீர் ?என்று .அவர் சொன்னார் “நங்கூரத்தை நாட்டுவேன் “என்று“முன்னைவிட பெரியதாய் இன்னொரு புயல் வருகிறது அப்போது நீர் என்ன செய்வீர் ?”“நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “என்றார் அவர் .இப்படி அது சென்று கொண்டு இருந்தது .“…பத்தாவது புயல் !”நஸ்ருதின் சொன்னார் “நான் இன்னொரு நங்கூரத்தை நாட்டுவேன் “அந்த மனிதர் கேட்டார் .”ஆனால் இத்தனை நங்கூரத்தை நீர் எங்கிருந்து பெறுவீர் ?”என்றுஅதற்கு நஸ்ருதின் சொன்னார் .”தாங்கள் எங்கிருந்து புயல்களை பெறுவீர்களோ அங்கிருந்துதான் “

என் பாடல் இசைப்பதற்குப் போகேனா?


கண்ணா உன் குழலில் ஒரு துளையாக மாட்டேனா
கடலாடும் உன் தமிழில் அலையாக மாட்டேனா
விண்ணோடும் முகிலோடும் விளையாடி விழுகின்ற
வில்லுக்குள் என் நிறத்தை விட்டுவைக்க மாட்டேனா
மண்ணோடும் விழுகின்ற மழையோடும் விளையாடும்
மரகதத்துப் பசும்புல்லாய் மாறிவிட மாட்டேனா
என்னோடு இவன் கொஞ்சம் இருந்தான் காண் என்பதுவாய்
இருந்துவிட்டு என் பாடல் இசைப்பதற்குப் போகேனா?

இவ்வாரக் கவிதை (அழகிய பெரியவன்)

உனக்கும் எனக்குமான சொல்
- அழகிய பெரியவன்
இரக்கத்தின் வாயிலில் மண்டியிடும்
பிச்சைப்பாத்திரம்
உன்னை நிரப்பச் செய்யும்படிக்கான
குழைதலற்றிருக்கின்றன என் விழிகள்
மார்பின் ரணம் பிதுக்கி
கன்ணீரால் நிரப்பலாம்
தசை கிழித்த முட்களைப் பிடுங்கி
அதில் போடலாம்
சாமங்களில் உறைந்த கணத்தை
உன் மேலிருந்து புரட்டி விடலாமதில்
பூ வைக்கலாம்
உன் விருப்பம் எதுவெனினும்
நொறுங்கச் செய்துவிடாதே
என்பதென் விண்ணப்பம்
இரப்பதற்கும் பிச்சையிடுவதற்குமான
தருக்கங்களின் இழைகலை அறுத்து நிகழுமிதில்
ஈவுகளின்றித் தொடரும்
உன் தீ இருத்தும் ஓயாத நொறுக்கலிலும்
மீண்டெழும் எலும்புகளாய்
என் பாத்திரம் யாசித்தலைத் தொடர்கிறாது

”கலை என்பது எப்போதுமே கலைகளிலிருந்து உண்டாகிற எழுச்சி
இசை என்பது எப்போதுமே இசையிலிருந்து பெறுகிற தூண்டுதல்
தியானம் என்பது எப்போதுமே தியானத்தைக் கடந்து போகும் குவிதல்”

காக்கைச் சிறகு


முடியும் இரவென
முறிந்ததென் காக்கைச் சிறகு

விலாத் துளைத்து முளைத்தது
வெள்ளி அன்னத்தூவி

வானத்திற்கு அப்பாலான
வெளியொன்றில் உரத்துக்கூவ

பெருங்கடல் மோதிச் சிதறி
நுரைத்து வழியும்
கருங்கற்பாறைகளில் கவிதை