பிறந்தநாள் வாழ்த்து
மகத்தில் பிறந்தவோர் மங்கலத் திருமகள்
அகத்தும் புறத்தும் அழகின் பேரொளி
மிகுத்துச் சிறக்கும் மெல்லிய பசுங்கிளி
தொகுத்து வைத்த தூயதோர் பூச்சரம்
வகுத்தலும் கழித்தலும் அற்றதாய்க் காதலின்
வாய்மையைக் கூட்டும் பெண்மையின் பெருக்கல்
ஜகத்தினை வெல்லும் நுண்ணறிவேற்பினும்
செருக்கே கொள்ளாத ஞானப்புலமையைப்
பெண்மையில் பூசிய செந்திரு
பூவினும் மெல்லிய பூங்கொடி
ஆய கலைகள் அனைத்தும் கற்றவள்
கற்றதைப் பெற்றிட முற்றிலும் தருபவள்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியதோர்
உருவினைக் கணவனாய் உடனுற்ப் பெற்றவள்
அலகிலா அழகுடன் அறிவுடன் பெண்ணையும்
ஆணையும் தன்னுடை மக்களாய் உற்றவள்
செஞ்சுடர்த் தாமரை சீர்மிகு திருமகள்
இத்தனை பெற்றவோர் ஏற்றப் பெருக்கினை
என்றும் அழிந்திடா ஏகச் சுடரினை
அத்தனை எம்மான் அனந்தனின் நிழலாய்
அடி தொழுதேத்தி அமைகிறேன் என்னுடை
நித்திய வேதமே நிரந்தர நதியே
நீடு நீ வாழிய, நிமலனும் அருள்கவே
அகத்தும் புறத்தும் அழகின் பேரொளி
மிகுத்துச் சிறக்கும் மெல்லிய பசுங்கிளி
தொகுத்து வைத்த தூயதோர் பூச்சரம்
வகுத்தலும் கழித்தலும் அற்றதாய்க் காதலின்
வாய்மையைக் கூட்டும் பெண்மையின் பெருக்கல்
ஜகத்தினை வெல்லும் நுண்ணறிவேற்பினும்
செருக்கே கொள்ளாத ஞானப்புலமையைப்
பெண்மையில் பூசிய செந்திரு
பூவினும் மெல்லிய பூங்கொடி
ஆய கலைகள் அனைத்தும் கற்றவள்
கற்றதைப் பெற்றிட முற்றிலும் தருபவள்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியதோர்
உருவினைக் கணவனாய் உடனுற்ப் பெற்றவள்
அலகிலா அழகுடன் அறிவுடன் பெண்ணையும்
ஆணையும் தன்னுடை மக்களாய் உற்றவள்
செஞ்சுடர்த் தாமரை சீர்மிகு திருமகள்
இத்தனை பெற்றவோர் ஏற்றப் பெருக்கினை
என்றும் அழிந்திடா ஏகச் சுடரினை
அத்தனை எம்மான் அனந்தனின் நிழலாய்
அடி தொழுதேத்தி அமைகிறேன் என்னுடை
நித்திய வேதமே நிரந்தர நதியே
நீடு நீ வாழிய, நிமலனும் அருள்கவே