உனக்கும் எனக்குமான சொல்
- அழகிய பெரியவன்
இரக்கத்தின் வாயிலில் மண்டியிடும்
பிச்சைப்பாத்திரம்
உன்னை நிரப்பச் செய்யும்படிக்கான
குழைதலற்றிருக்கின்றன என் விழிகள்
மார்பின் ரணம் பிதுக்கி
கன்ணீரால் நிரப்பலாம்
தசை கிழித்த முட்களைப் பிடுங்கி
அதில் போடலாம்
சாமங்களில் உறைந்த கணத்தை
உன் மேலிருந்து புரட்டி விடலாமதில்
பூ வைக்கலாம்
உன் விருப்பம் எதுவெனினும்
நொறுங்கச் செய்துவிடாதே
என்பதென் விண்ணப்பம்
இரப்பதற்கும் பிச்சையிடுவதற்குமான
தருக்கங்களின் இழைகலை அறுத்து நிகழுமிதில்
ஈவுகளின்றித் தொடரும்
உன் தீ இருத்தும் ஓயாத நொறுக்கலிலும்
மீண்டெழும் எலும்புகளாய்
என் பாத்திரம் யாசித்தலைத் தொடர்கிறாது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment