Tuesday, February 24, 2009

என் பாடல் இசைப்பதற்குப் போகேனா?


கண்ணா உன் குழலில் ஒரு துளையாக மாட்டேனா
கடலாடும் உன் தமிழில் அலையாக மாட்டேனா
விண்ணோடும் முகிலோடும் விளையாடி விழுகின்ற
வில்லுக்குள் என் நிறத்தை விட்டுவைக்க மாட்டேனா
மண்ணோடும் விழுகின்ற மழையோடும் விளையாடும்
மரகதத்துப் பசும்புல்லாய் மாறிவிட மாட்டேனா
என்னோடு இவன் கொஞ்சம் இருந்தான் காண் என்பதுவாய்
இருந்துவிட்டு என் பாடல் இசைப்பதற்குப் போகேனா?

No comments:

Post a Comment