Because I could not stop for Death,
He kindly stopped for me;
The carriage held but just ourselves
And Immortality
- Emily Dickinson
- Emily Dickinson
Patti, even death cannot separate you from me
பால்யத்தின் பிராயங்களை
மென்று கொண்டிருக்கிறாள் பாட்டி
தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
திரைவிழுந்த விழிகள்
இருப்பிற்கு அப்பால்
இனமறியாப் பதற்றத்துடன்
விடுவித்துக்கொள்ள இயலாத
பெருந்துக்கம் உலாத்தும் அவளை
விசித்திரமான புதிர் உலகில்
மர்ஃபி குழந்தையென ஆட்காட்டி விரல்
முகவாயில் பதிந்திருக்க
ஆழ்ந்த மௌனத்தின் வெளியில்
குரலற்ற காகமாய் அலையும்
நீராலான விழிகள் தருவிக்கிறன
‘லால்குடி’ நினைவுகளின் மின்னலை
உறைந்த விழிகளின் ஓரத்தில்
உருளக்காத்திருக்கிறது கண்ணீர்
சுருக்கம்மிகு கன்னங்களின் மீது
எவரும் புரிந்துகொள்ள இயலாத
நினைவுகளின் தொகுப்பை
ஓயாமல் உதடுகள் முணுமுணுக்க
காலம் இசையமைத்துக்கொண்டிருக்கிறது
அவளின் அந்திமப் பாடலை
மென்று கொண்டிருக்கிறாள் பாட்டி
தன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி
திரைவிழுந்த விழிகள்
இருப்பிற்கு அப்பால்
இனமறியாப் பதற்றத்துடன்
விடுவித்துக்கொள்ள இயலாத
பெருந்துக்கம் உலாத்தும் அவளை
விசித்திரமான புதிர் உலகில்
மர்ஃபி குழந்தையென ஆட்காட்டி விரல்
முகவாயில் பதிந்திருக்க
ஆழ்ந்த மௌனத்தின் வெளியில்
குரலற்ற காகமாய் அலையும்
நீராலான விழிகள் தருவிக்கிறன
‘லால்குடி’ நினைவுகளின் மின்னலை
உறைந்த விழிகளின் ஓரத்தில்
உருளக்காத்திருக்கிறது கண்ணீர்
சுருக்கம்மிகு கன்னங்களின் மீது
எவரும் புரிந்துகொள்ள இயலாத
நினைவுகளின் தொகுப்பை
ஓயாமல் உதடுகள் முணுமுணுக்க
காலம் இசையமைத்துக்கொண்டிருக்கிறது
அவளின் அந்திமப் பாடலை
(ருதுவனம்)
பாட்டியின் முக தரிசனம் கிடைத்தது. என்ன சொல்வதென்று தெரியவில்லை..ஆயினும் மொழியின் மொத்தத்திலும் குவிந்து கிடக்கும் கோடி கோடி வார்த்தைகளில் அமிழ்ந்து எதையும் எடுத்தாள வழியின்றி..கண்களினோரம் ஈரம் கசிய ரசிக்கிறேன்.
ReplyDeletehow u know the art of melting the hearts of people?!...paatti...paasappattiyal...
ReplyDelete