பாம்பே ஜெயஸ்ரீயை
தினசரி கேட்க முடிவதில்லை
வாகாய் வந்து மடியில் உட்கார்ந்தாலும்
வண்ணத்துப்பூச்சி பிடிக்கத் தோன்றுவதில்லை
மார்கழிக் குளிரில் வாசலில் பூசணிப்பூ வைக்க
விடியல் விழிப்பு வருவதேயில்லை
வாசலில் கோலம் போட 30 வருடமாய் முயன்றும்
கோலப்பொடி விரலிடுக்குவிட்டு
கம்பியாய் விழுந்ததே இல்லை
தங்கப்பூணிட்டட பெரிய உருத்திராட்ச மாலை
அணியும் ஆசை விடவே இல்லை
இன்னும் ஜேஸுதாசுக்கு கச்சேரியின் போது
கவுரி வீசவும் கச்சேரி முடிந்ததும்
ஏலம் மிளகிட்டு சுடச்சுடப் பாலாற்றிக் கொடுக்கவும்
அம்ஜத் அலிகானுக்கு விரல் நீவி விடவும்
சோனல் மான்சிங்கிற்கு பாதச் சொடக்கெடுக்கவும்
டாலியின் மீசையில் ஊசித்தட்டன் உட்காரவைக்கவும்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் உதட்டில்
அழுத்தி முத்தமிடவும்
லலிதா ஜுவலர்ஸின் பனிச்சிலைக்கு பதிலாய்
உருகும் பெண்ணாய் நானிருக்க
திரண்ட மார்பில் வைரம் மின்னவும்
இன்னொரு முறை தொட்டில் குழந்தைக்குப் பாலூட்டவும்
சாகுந்தலத்தை மூலத்தில் படிக்கவும்
கண்ணகியின் சிலம்பைத் தொட்டுப் பார்க்கவும்
கொடைக்கானலின் தற்கொலைப் பாறையிலிருந்து
கூடை கூடையாய் பிளம்ஸ் உருட்டவும்
இன்னும் பல.....உம்....முடிவதேயில்லை
வேண்டாம் முடிய
என்றும் இப்படி
யே யா யோ இவள்.
தினசரி கேட்க முடிவதில்லை
வாகாய் வந்து மடியில் உட்கார்ந்தாலும்
வண்ணத்துப்பூச்சி பிடிக்கத் தோன்றுவதில்லை
மார்கழிக் குளிரில் வாசலில் பூசணிப்பூ வைக்க
விடியல் விழிப்பு வருவதேயில்லை
வாசலில் கோலம் போட 30 வருடமாய் முயன்றும்
கோலப்பொடி விரலிடுக்குவிட்டு
கம்பியாய் விழுந்ததே இல்லை
தங்கப்பூணிட்டட பெரிய உருத்திராட்ச மாலை
அணியும் ஆசை விடவே இல்லை
இன்னும் ஜேஸுதாசுக்கு கச்சேரியின் போது
கவுரி வீசவும் கச்சேரி முடிந்ததும்
ஏலம் மிளகிட்டு சுடச்சுடப் பாலாற்றிக் கொடுக்கவும்
அம்ஜத் அலிகானுக்கு விரல் நீவி விடவும்
சோனல் மான்சிங்கிற்கு பாதச் சொடக்கெடுக்கவும்
டாலியின் மீசையில் ஊசித்தட்டன் உட்காரவைக்கவும்
மைக்கேல் ஏஞ்சலோவின் டேவிட் உதட்டில்
அழுத்தி முத்தமிடவும்
லலிதா ஜுவலர்ஸின் பனிச்சிலைக்கு பதிலாய்
உருகும் பெண்ணாய் நானிருக்க
திரண்ட மார்பில் வைரம் மின்னவும்
இன்னொரு முறை தொட்டில் குழந்தைக்குப் பாலூட்டவும்
சாகுந்தலத்தை மூலத்தில் படிக்கவும்
கண்ணகியின் சிலம்பைத் தொட்டுப் பார்க்கவும்
கொடைக்கானலின் தற்கொலைப் பாறையிலிருந்து
கூடை கூடையாய் பிளம்ஸ் உருட்டவும்
இன்னும் பல.....உம்....முடிவதேயில்லை
வேண்டாம் முடிய
என்றும் இப்படி
யே யா யோ இவள்.
தற்கொலைப் பாறைகளில்
ReplyDeleteப்ளம்ஸ் பழங்கள் உருட்டி விளையாடுகிற மனம்
புதிதானது
உயிரை மாய்க்க போகிறவன்
ப்ளம்ஸ் பழங்களின் வண்ணங்களில்
அதன் உருளும் அழகில்
ஒரு வேளை மயங்கிவிடக்கூடும்
மரணமமென்பது தானாய் வருவது
வரவழைத்துக்கொள்வதல்ல
என்பதை இந்தக் காட்சிப் படுத்தலின் ஊடே
கண்டுகொண்டேன்
வியப்பில் அமிழ்ந்தேன்
அய்யப்பமாதவன்
செர்ரிமரத்தில் தன்னை தூக்கிலிட்டுக்கொள்ள வறுமையின் காரணமாய் முயலும் ஒருவன் கொத்துகொத்தாய் காய்த்திருக்கும் செர்ரிப்பழங்களைப் பார்த்துவிட்டு தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வாழ்க்கைக்கு திரும்புவதாய் டேஸ்ட் ஆஃப் செர்ரி என்ற ஈரானியன் படத்தில் ஒரு காட்சியில் ஒரு கதையாய்ச் சொல்லப்படுகிறது. அதைப் போல இந்தக் கவிதையில் ப்ளம்ஸ் பழங்களின் வழியே சொல்லப்படுவது புதிய படிமமாய் இருந்தது
ReplyDeleteஅய்யப்பமாதவன்